விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :4526 days ago
விருதுநகர்: விருதுநகரில் வைகாசி பொங்கலை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில், வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன், விநாயகர் சுவாமிகள் நகர் வலம் வர தேரோட்டம் நடந்தது.வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா,கடந்த 21 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மன், பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் நடந்தது. 28 ல் நடந்த பொங்கல் விழாவில், பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது , நேர்த்தி கடனான கயிறு குத்துதல், அக்னி சட்டி எடுத்தனர். இதைதொடர்ந்து, நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் சிறிய தேரில் விநாயகர், பெரிய தேரில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருள, தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது பஜார் வழியாக, தெற்கு ரத வீதி வந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.