வீரபாண்டி உண்டியல் ரூ.8.65 லட்சம் வசூல்!
ADDED :4527 days ago
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் உள்ள 22 தற்காலிக உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய நேர்த்திக்கடன் தொகை நேற்று எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆய்வாளர் பாண்டிராணி முன்னிலை வகித்தனர். வீரபாண்டி சவுராஷ்டிரா ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் உண்டியல் தொகையினை எண்ணினர். மொத்தம் 8 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது. வரும் ஜூன் 22 ல் நிரந்தர உண்டியல்கள் பத்தும் எண்ணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.