உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி கோவிலில் ஆர்ஜித சேவை கட்டண அறிவிப்பு!

காளஹஸ்தி கோவிலில் ஆர்ஜித சேவை கட்டண அறிவிப்பு!

நகரி: காளஹஸ்தி கோவிலில் நடத்தப்படும், ஆர்ஜித சேவைகளுக்கான கட்டண விவரங்கள் பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பஞ்சபூத சிவ ஸ்தலங்களுள் ஒன்றான வாயு சேத்திரம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் ஞானபிரசூணாம்பிகை தாயார் சமேதரான வாயுலிங்ககேஸ்வர சவாமி கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ஆர்ஜித சேவை கட்டண விவரங்களை கீழ்கண்டவாறு அறிவித்துள்ளது.

சேவை கட்டணம் ரூபாயில்..

அதிகாலை சப்ரபாத சேவைக் கட்டணம் 50
கோமாதா பூஜை 50
அர்ச்சனை 25
சக்ஸ்ரநாம அர்ச்சனை 200
திரிஷதி அர்ச்சனை 25
மஹான்யாச பூர்வீக ஏகாதசி ருத்ராபிஷேகம் 1500
பால் அபிஷேகம் (வாயுலிங்க சவாமிக்கு) 100
பச்சை கற்பூரம் அபிஷேகம் 100
ருத்ராபிஷேகம் 600
பஞ்சாமிகு அபிஷேகம் 30
நித்ய தெய்வ அபிஷேகம் 100
சனீஸ்வர அபிஷேகம் 150
அகண்ட தீபாராதனை அபிஷேகம் 100
பிரத்யேக பிரவேசம் 50
நித்ய உற்சவம் 58
நித்ய கல்யாண உற்சவம் 501
ருத்திர ஹோமம் 1116
சண்டி ஹோமம் 1116
அபிடோத்திர ஸ்வர்ண கமலம் அர்ச்சனை
(வெள்ளி மட்டும்) 1000
கோவில் சிறப்பு ஆசீர்வாதம் 500
ராகு கேது சர்வ தோஷ பூஜை சாதாரண கட்டம் 300
சிறப்பு கட்டணம் 750
ஆசீர்வாத சர்வதோஷ நிவாரண பூஜை 1500
சிறப்புஆசீர்வாத சர்வ தோஷ நிவாரண பூஜை 2500
ஏகாந்த சேவை கட்டணம் 100


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !