உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவானை நினைத்தால் பூர்ண நிலை தாமோதர தீட்சிதர் அருளுரை!

பகவானை நினைத்தால் பூர்ண நிலை தாமோதர தீட்சிதர் அருளுரை!

சிவகாசி: பகவானை மனதில் நினைத்தால், பூர்ண நிலை அடையலாம்,என, தாமோதர தீட்சிதர் கூறினார்.சிவகாசி சிவன் கோயிலில் நடந்த, சிவலீலா உபன்யாசம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பேசுகையில்,"" கோயில்களில் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, கோயில் வெளியே சிறிது நேரம் உட்கார வேண்டும். எதற்காக உட்கார வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. பகவானை தரிசித்து விட்டு, வெளியே உட்கார்ந்து கதை பேசுவதற்கோ, பழம் தேங்காய் உடைத்து சாப்பிட்டு, கோயிலை குப்பை ஆக்குவதற்கு அல்ல. கோயிலை அசுத்தப்படுத்த கூடாது. கோயில் உள்ளே பகவானை எப்படி பார்த்தோம் என எண்ணிப்பார்க்க, கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். கண்களை மூடினால் பகவானை பார்த்த உருவம், ஞாபகத்தில் வரவேண்டும். அதற்காகத்தான் தியானம் செய்ய வேண்டும். நாம் எங்கு சென்றாலும் ,பகவானை மனதில் நினைத்து, நினைவு படுத்தினால், பூர்ண நிலை அடையலாம். பகவானை வழிபடுவதற்கு இசை உயர்வானது. இசை மூன்று வித தன்மைகளில் வெளிப்படும். சாத்வீக இசையை கேட்டால் கண்ணீர் வரும். சில இசை கேட்டால், எழுந்து குதிக்க தோன்றும். புலன்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் இசையை கேட்க கூடாது. வாழ்க்கையில் எவ்வளவு துன்பம், சிரமம் வந்தாலும், பகவான் நாமத்தை சொன்னால், அத்தனை துன்பங்களும் தாண்டி சென்று விடும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !