உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவிஅம்மன் குண்டம் திருவிழா கோலாகலம்!

காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவிஅம்மன் குண்டம் திருவிழா கோலாகலம்!

பெருந்துறை: காஞ்சிக்கோவில், ஸ்ரீசீதேவி அம்மன் ரதோற்சவத் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 15ம் தேதி இரவு பூச்சாட்டுடன் விழா துவங்கியது. 23ம் தேதி இரவு கிராம சாந்தியும், 24 ம் தேதி இரவு கொடியேற்று விழாவும், 29ம் தேதி இரவு அக்னி குண்டம் ஆரம்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை அக்னி குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல், காலை, 11 மணிக்கு அக்னி அபிஷேகம், இரவு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசீதேவி அம்மன் ரதமேறுதல், தேர் நிலைப்பேற்றுதல் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு குண்டம் இறங்கினர். இன்று மாலை, 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து, திருவீதி உலாவும், நாளை மாலை, 4 மணிக்கு திருத்தேர் நிலை வந்து சேருதல், இரவு, 9 மணிக்கு ஸ்ரீசீதேவி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருதல், 2ம் தேதி காலை, 10 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் திருவிழா நிறைவு பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !