உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி விவேகானந்தர் ரதம்பல இடங்களில் வரவேற்பு!

சுவாமி விவேகானந்தர் ரதம்பல இடங்களில் வரவேற்பு!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் சுவாமி விவேகனாந்தர் பொன்விழா ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சுவாமி விவேகானந்தர் உருவ சிலை கொண்ட பொன்விழா ரதம் நாடு முழுவதும் அனைத்து பகுதிக்கும், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பொன்விழா ரதம், நீலகிரி மாவட்டத்தில் இருந்து புன்செய்புளியம்பட்டி வந்தது. அங்கிருந்து புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி, செண்பகபுதூர் வழியாக சத்தியமங்கலம் வந்தது. எஸ்.ஆர்.டி., கார்னரில் எஸ்.ஆர்.டி., யுனிவர்சல் பள்ளி முதல்வர் ராஜலட்சுமி தலைமையில் பெண்கள் வரவேற்பு கொடுத்தனர்.விவேகானந்தர் உருவ சிலைக்கு பெண்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பிரம்மகுமாரிகள் சங்கத்தின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் தலைமையில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள், செய்து மரியாதை செலுத்தினர்.ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இருந்து மேட்டூர் ரோடு வழியாக, பெருந்துறை ரோட்டில் சென்று, யூ.ஆர்.சி., பள்ளியை சென்றடைந்தது. விவேகானந்தரின் பொன்மொழிகளை ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !