உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கிழக்குவீதி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த ராமநவமி உற்சவத்தின் நிறைவாக திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த மாதம் 25ம் தேதி ராமநவமி மகோற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சீதா லஷ்மண, அனுமந்த சமேத ராமச்சந்திர மூர்த்தி வீதியுலா நடந்தது. 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரியராமானு ஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழா ஏற்பாடுகளை சத் சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !