சங்கிலி மாட சாமி கோயிலில் ஆகர்ஷண ஹோமம்
ADDED :4608 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேனியர்குடித்தெரு சங்கிலி மாட சாமி கோயிலில், 36 வது தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு, ஓம் அஷ்டக பைரவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண ஹோமம் நடந்தது. காலையில் சொக்கநாதர், மீனாட்சி, சங்கிலி மாடசாமி, பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பைரவருக்கு சந்தனக்காப்பு செய்யப்பட்ட பின், கும்பம் வைத்து கோயில் மைய மண்டபத்தில்,ஆகர்ஷண ஹோமம் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பநீரால், சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.