மஞ்சக்கயிறு தாலி மஞ்சக்கயிறு!
ADDED :4524 days ago
அம்பிகையின் மகிமையைப் போற்றும் லலிதா சகஸ்ர நாமத்தில், காமேச பந்த மாங்கல்ய சூத்ர சோபிதா கந்தரா என்று அம்பிகை போற்றப்படுகிறாள். சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச்சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள். ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறு தான். ஆதிசங்கரர், சவுந்தர்யலஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார். எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.