உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விருது

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விருது

சென்னை: சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த உணவகங்கள், தங்கும் விடுதிகள், பயண ஏற்பாட்டாளர்கள் உட்பட 17 பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் 31 நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு மாவட்டத்திற்கான விருது, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சுத்தமான சுற்றுலா தலம் விருது வழங்கப்பட்டது. சுற்றுலாத்துறை செயலர் மணிவாசன் பேசுகையில், ‘‘தமிழக பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்கு 5 சதவீதமாக உள்ளது. இதை 12 சதவீதமாக, வரும் 2030ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும். தமிழக சுற்றுலாத்துறை செல்ல வேண்டிய தொலைவு வெகு துாரம்,’’ என்றார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !