உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்பி தங்கக்கம்பி!

தம்பி தங்கக்கம்பி!

காட்டுக்குச் சென்ற ராமரைக் காண, அவரது தம்பி பரதன் பரிவாரங்களுடன் கங்கைக்கரை நோக்கிச் சென்றான். அவர்களால் உண்டான ஓசையும், புழுதியும் கண்ட குகன், யாரோ படையெடுத்து வருவதாக எண்ணி, தன் சகாக்களிடம், சேனை ஒன்று நம்மை நோக்கி வருகிறது. தேரில் ஆத்திக் கொடி பறப்பதால் அயோத்தி மன்னன் பரதனாகத் தான் இருக்க வேண்டும். ஆட்சியைக் கைப்பற்றிய பரதன், அண்ணன் ராமனைக் காட்டிலேயே கொன்று விட முடிவெடுத்து விட்டான் என தோன்றுகிறது. நம்மைத் தாண்டிச் செல்ல பரதனை அனுமதிக்கக் கூடாது, என்று சொல்லி போருக்குத் தயாரானான். ஆனால், பரதனோ குகன் அருகில் வந்ததும் அவனை வணங்கினான். சத்ருக்கனன், குலகுரு வசிஷ்டர் இருவரும் அவனைத் தொடர்ந்து  வந்தனர். பரதனும் ராமனைப் போலவே மரவுரி தரித்திருப்பதைக் கண்ட குகனின் உள்ளம் உருகியது. உண்மையை உணர்ந்து பரதனை வணங்கினான். அண்ணன் மீது அன்பு கொண்ட பரதனைத் தழுவிக் கொண்டு, ஆயிரம் ராமர் சேர்ந்தாலும் உனக்கு ஈடாகாது, என்று பாராட்டினான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !