கண்ணனின் இரண்டாம் கீதை!
ADDED :4522 days ago
குரு÷க்ஷத்திர யுத்தத்தின் போது, அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்தது பகவத்கீதை. போர் முடிந்தபின், கிருஷ்ணர் துவாரகை சென்று 26 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினார். அவருக்கு 125 வயது ஆனதும், பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் செல்ல முடிவெடுத்தார். இதை அறிந்த கிருஷ்ணரின் நண்பரும், உதவியாளருமான உத்தவர், கிருஷ்ணா! வைகுண்டம் புறப்பட தீர்மானித்து விட்டீர்களே! உங்களைப் பிரிந்து எப்படி வாழப் போகிறேன்? எனக்கு நல்வழி காட்ட யார் இருக்கிறார்கள்? என்று வருந்தினார். அப்போது கிருஷ்ணர் உத்தவருக்கு அருளிய உபதேசமே உத்தவகீதை. பாகவதம் என்னும் நூலில், பதினோராம் அத்தியாயத்தில் இது இடம்பெற்றுள்ளது. பக்திவழியில் முக்தியடைய வழிகாட்டுகிறது இது.