தேர்த் திருவிழாவை கோடையில் நடத்துவது ஏன்?
ADDED :4529 days ago
மக்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். ஆடியில் விதைத்து தையில் அறுவடை செய்வார்கள். பங்குனி முதல் ஆனி வரையில் விவசாய வேலை குறையும். அதனால், கோயில் திருவிழாவான பிரம்மோற்ஸவத்தை கோடை காலத்தில் நடத்துவர். ஊர் கூடி இழுத்தால் தானே தேர்பவனி சிறப்பாக அமையும் என்பதால் இந்த ஏற்பாடு.