உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: விருந்தும் விழாவும்!

கடகம்: விருந்தும் விழாவும்!

கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய் ஜூலை 4 வரையும், சுக்கிரன் ஜூன்24க்குப்பிறகும் நன்மை தருவார்கள். காரிய அனுகூலம்                                 ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சூரியன்,புதனால் சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிக்கலாம். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை.சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. எனவே, வெளியில் செல்லும் போது நம்பகமானவர்களிடம் வீட்டுப்பொறுப்பை  ஒப்படைத்துச் செல்வது நன்மை தரும்.  பயணத்தின் போது கவனம் தேவை. குறிப்பாக வாகனம் இயக்குபவர்கள்  அதிக வேகத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும்.  இதனால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர் களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களுக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. தொழிலில் பொருள் விரயம் ஏற்படலாம். ஆனால், ஜூன் 23,24 தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற்று முன்னேற்றம் அடையலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மனதிருப்தியோடு காணப்படுவர்.மாணவர்கள்அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும். பெண்களுக்கு உங்களால் குடும்பம் சிறந்த நிலைக்கு வரும். சிலர் விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிறந்த வீட்டிலிருந்து பொருட்கள் வர வாய்ப்பு உண்டு. உடல்நலம் மாத ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். பிற்பகுதியில் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.

அதிர்ஷ்ட எண்: 2,3          நிறம்: வெள்ளை, சிவப்பு.
நல்ல நாட்கள்: ஜூன் 17,18, 23,24,25,26, ஜூலை 2,3,4,5,6, 9,10,11, 14,15.
கவன நாட்கள்: ஜூன் 27,28,29.

வழிபாடு: ஞானிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். ஜூலை4க்கு பிறகு செவ்வாய்க்கு துவரை படைத்து வணங்கி வாருங்கள். காலையில் சூரியனை வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபட தவறாதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !