யாத்திரை ரயில் முன்பதிவு
ADDED :4502 days ago
மதுரை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜூன் 16 முதல் 12 நாட்களுக்கு, பூரி விமலாதேவி சக்திபீடம், கவுகாத்தி காமாக்கியா சக்தி பீடம், கோல்கட்டா காளிகாதேவி சக்தி பீடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். ஜூலை 1 முதல் 9 நாட்களுக்கு, விஜயவாடா, ஐதராபாத், பத்ராச்சலம், பூரி, விசாகபட்டினம், அன்னாவரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வழியாக ரயில் செல்லும். கட்டணத்தில் 2ம் வகுப்பு கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றிப் பார்க்க வாகனம், தங்குமிட வசதி உண்டு. முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு, 0452- 234 5757ல் தொடர்பு கொள்ளலாம் என, இணைப் பொதுமேலாளர் ரவிகுமார் தெரிவித்தார்.