விநாயகர் வடிவில் தக்காளி!
ADDED :4502 days ago
பாகூர்: மளிகை கடைக்கு விற்பனைக்கு வந்த தக்காளி பழம், தும்பிக்கையுடன் விநாயகர் முக தோற்றத்தில் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு சென்றனர். பாகூர் அடுத்துள்ள சேலியமேட்டைச் சேர்ந்தவர் அப்துல்காதர் 60; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன், கடலூரியில் இருந்து தக்காளி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த தக்காளி பழங்களை விற்பனை செய்ய தராசில் எடை போட்டார். அப்போது, சுமார் 80 கிராம் எடையுள்ள ஒரு தக்காளி பழம், விநாயகர் போன்ற வடிவத்தில் இடப் புறம் வளைந்த தும்பிக்கையுடனும், இரண்டு கண்களுடன் இருப்பதை கண்டு கடைகாரரும், பொதுமக்களும் ஆச்சரியப்பட்டனர்.