உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் சுபதம் வரி‌சையில் கட்டுப்பாடு : தேவஸ்தானம் அதிரடி!

திருமலையில் சுபதம் வரி‌சையில் கட்டுப்பாடு : தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி: திருமலையில், கை குழந்தைகளுடன் வரும் பெற்றோரை தரிசனத்திற்கு அனுமதிக்கும், சுபதம் வரி‌சையில், சில கட்டுப்பாடுகளை கொண்டு வர, திருமலை  திருப்பதி தேவஸ்தானம் முடிவு ‌செய்துள்ளது.இது குறித்து, தேவஸ்தான ‌செயல் இணை அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு, நேற்று கூறியதாவது: இனிமேல், "சுபதம் வழியாக, ஏழுமலையான் கல்யாண உற்சவம், டோலோத்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகத்வபீபாலங்கார ‌சேவாடிக்கெட்கள் பெற்றவர்கள் அடையாள அட்டை மற்றும் ‌சேவா டிக்கெட்டின் நேரம் ஆகியவற்றை, சரிபார்த்த பிறகே, அனுமதிக்கப்படுவர். பின், கை குழந்தைகளின் பெற்றோருக்கு, ஒதுக்கிய நேரத்தில், அவர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், தேவஸ்தான ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும், அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுப்ரபாத ‌சேவை நடைபெறும் சமயத்தில், பக்தர்கள், கருடாழ்வாருக்கும், ஏழுமலையானுக்கும் இடையில் நிற்காமல், அனைவரும் வரி‌சையாக உட்கார வைக்கப்படுவர். தோமாலை அர்ச்சனை ‌சேவையின் போதும், இவ்வரிøசயே கடைபிடிக்கப்படும். இவை அனைத்தையும் ‌செயல்படுத்த, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி காலை, 8:00 மணிக்கு மட்டுமே, "சுபதம் வரி‌சை திறக்கப்படும். 10:00 மணிக்கு அனுமதிக்கப்படும் கல்யாண உற்சவ பக்தர்கள், இனிமேல், 8:00 மணிக்கு, "சுபதம் வழியில் அனுமதிக்கப்பட்டு, காத்திருப்பு அறையில் அமர வைக்கப்படுவர். மற்ற ஆர்ஜித ‌‌‌சேவா டிக்கெட்களுக்கும், இதே வழிமுறை கடைபிடிக்கப்படும். இனி, அங்க பிரதட்சணம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், வைகுண்டம் ஒன்று, கியூ காம்பளக்ஸ் வழியாக, கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு öசய்வதன் மூலம்,"சுபதம் வரிøசயில் உள்ள, இடைத் தரகர்கள் பிரச்னை கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !