திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா!
ADDED :4681 days ago
திருப்பரங்குன்றம், ஜூன் 12திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா, ஜூன் 14ல் துவங்கி ஜூன் 23ல் நிறைவடைகிறது.இந்நாட்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி, திருவாட்சி மண்டத்தை வலம் வந்து, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளுவர். கோயில் ஓதுவாரால் ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டு, 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆட்டம் நடக்கும். ஜூன் 23 உச்சிகால பூஜையின்போது, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மா,பலா,வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.