உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட பெருமாள் கோவிலில்தீர்த்தவாரி உற்சவம்

வைகுண்ட பெருமாள் கோவிலில்தீர்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம்:வைகுண்ட பெருமாள் கோவிலில், தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.காஞ்சிபுரத்தில், பழமையான தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுந்தவல்லி உடனுறை வைகுண்ட பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும்.நடப்பாண்டு பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, குதிரை வாகன உற்சவமும், நேற்று காலை, தீர்த்தவாரி உற்சவமும், இரவு சப்தாவரண உற்சவமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !