கழுகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :4611 days ago
மடத்துக்குளம்: மடத்துக்குளம் கழுகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகேயுள்ள மாரியம்மன் கோவிலில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வழிபடுகின்றனர். கோவிலில் மாரியம்மன், விநாயகர் மற்றும் கருப்பணசாமிக்கு புதிய மண்டபங்கள் கட்டப்பட்டன. குதிரை வாகனம், மூன்று நிலை ராஜகோபுரத்துக்கு கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடதத ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 7.25 மணிக்கு யாகபூஜை, ஹோமம், கலசங்கள் திருஉலாவை தொடர்ந்து காலை 10.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. காலை 11.00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.