நவசக்தி மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம்!
ADDED :4536 days ago
புதுச்சேரி: நவசக்தி மாரியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.பேட்டையான் சத்திரம், திலகர் நகரில் அமைந்துள்ள நவசக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மூலவர் சன்னதி, நவசக்தி விநாயகர், பாலசுப்ரமணியர், நவக்கிரக சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன. கோவிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களும் வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 10ம் தேதியிலிருந்து, யாகசாலை பூஜை நடந்து வந்தது. மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, அசோக் ஆனந்து எம்.எல்.ஏ., பங்கேற்றனர். சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களும் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம், மாலையில் அம்மன் வீதியுலா நடந்தது.