திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித்திருவிழா துவக்கம்!
ADDED :4530 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் நடக்கும் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, இரவில் சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா வந்தனர். நேற்று முதல் 23ம் தேதி வரையிலும் தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், வீதி உலா நடக்கிறது. 22ம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுவர். காலை 7.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கப்படும். அம்பாள் தேர், சுவாமி, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் இழுக்கப்படும்.