உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் கோவிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

சங்கராபுரம் கோவிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் சம்வத்ஸரா அபிஷேகம் நடந்தது. சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக தின விழா நடந்தது. இதனை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்த அபிஷேகமும், கணபதி ஹோம பூஜைகள் நடந்தது. பாண்டலம் ரவி குருக்கள், கணபதி ஆகியோர் பூஜைகளை நடத்தினர். பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !