பாதியில் நின்று போன நடராஜர் கோயில் பணி
ADDED :4535 days ago
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் ஓராண்டாக பாதியில் நின்று போன நடராஜர் கோயில் பணி தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து அறநிலையத்துறையின் கீழ் நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயில் கோபுரம் தூர்ந்து போனதால், கோயிலை புதுப்பிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. திருப்பணி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு கோயிலை புதுப்பிக்கும் பணி துவங்கியது. ஆறு மாதங்கள் நடந்த கட்டுமான பணி, பாதியில் நின்று விட்டது. அறநிலையத்துறையினர் பணி தொடர நடவடிக்கை எடுக்கவில்லை. அறநிலையத் துறையினர் நடராஜர் கோயில் திருப்பணி தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்.