சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :4502 days ago
திருத்தணி: ஆனி மாதத்தை முன்னிட்டு, விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி ம.பொ.சி., சாலையில், சுந்தர விநாயகர் கோவில் உள்ளது, இக்கோவில் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலாகும். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனி மாதம், முதல் நாளை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில், ஒருயாகசாலை, இரண்டு கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு பால், பன்னீர், தேன் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் புகழேந்தி, குருக்கள் துரைராஜ் ஆகியோர் செய்திருந்தார்.