கோதண்டராமர் கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்
ADDED :4502 days ago
மதுராந்தகம்: மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில், பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். நடப்பாண்டு பிரம்மோற்சவம், நேற்று காலை, 6:00 மணி அளவில், மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டு முழுங்க, கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது. இரவு சிம்ம வாகனமும், இன்று காலை ஹம்ஸ வாகனமும், இரவு சூரியபிரபை வாகன உற்சவமும் நடைபெறும். நாளை காலை, பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.