துவரிமான் ரங்கராஜர் பிரதிஷ்டா உற்சவம்
மதுரை: மதுரை துவரிமான் ரங்கராஜப்பெருமாள் கோயில், 13வது பிரதிஷ்டா உற்சவம், வரும் 21ல் நடக்கிறது. 600 ஆண்டு பழமை மிக்க இக்கோயில், அகோபில மடம் 45வது பட்டம் ஸ்ரீநாராயண யதீந்திர மகாதேசிக சுவாமிகளால் ஆனி அனுஷத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனி அனுஷமான வரும் 21ல் நடக்கும் விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கராஜப்பெருமாள், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பரிவார மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். முன்னதாக, துவரிமான் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருக்கும் அகோபிலமடம் 40வது பட்டம் ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் 72து பிரதிஷ்டாதினம், ஆனி விசாகமான வரும் 20ல் நடக்கிறது. விழாவில் காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9க்கு வேத, திவ்ய பிரபந்த பாராயணம், 10க்கு சாற்றுமுறை, மாலை 4க்கு வீதி புறப்பாடு நடக்கிறது. இந்த தகவலை காரியதரிசி வெங்கட்ராமன் தெரிவித்தார்.