உலகிலேயே உயரமான அனுமார் சிலை!
ADDED :4502 days ago
ஆந்திர பிரதேசம், பரிதாலாவில், உலகிலேயே உயரமான அனுமார் சிலை அமைந்துள்ளது. வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் சுவாமி என்று அழைக்கப்படும் இந்த சிலை 41 மீட்டர் ( 135 அடி) உயரம் உள்ளது. இந்த சிலை விஜயவாடா- ஐதராபாத் நெடுஞ்சாலையில், விஜயவாடாவிலிருந்து 25 கி.மீ., தூரத்தில் பரிதாலா நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 2003ம் ஆண்டு அமைக்கப்பட்டது.