திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி விழா துவக்கம்
ADDED :4498 days ago
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி தேவி, செங்கமலதாயார் சேவா பக்த சபா தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். முக்கிய திருவிழாவாக 26ம்தேதி காலை 9.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.