வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ஊத்துக்கோட்டை: ராதா ருக்மணி சமேத வேணுகோபாலப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும், 21ம் தேதி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, புதுச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது, ராதா ருக்மணி சமேத வேணு கோபால பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவில் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து, வரும், 21ம் தேதி காலை, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அனுக்ஞை, பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப் பணம், யாகசாலை பூஜைகள் ஆரம்பம், ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள், 21ம் தேதி காலை, 5:30 மணிக்கு விஸ்வரூபம், கோ பூஜை, திருவாராதனம் ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாத்ராதானம், கலச புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதையடுத்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.