உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்காளம்மன் கோவிலில் பால் குட விழா

செங்காளம்மன் கோவிலில் பால் குட விழா

பென்னலூர் பேட்டை:பென்னலூர்பேட்டை அருகே, செங்காளம்மன் கோவிலில் நடந்த விழாவில், ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து வழிபட்டனர். பென்னலூர்பேட்டை அடுத்த, ராமநாதபுரம் கிராமத்தில் செங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதத்தில் பால் குடம் எடுத்து வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான விழா, நேற்று காலை துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கிராமத்தில் உள்ள பெண்கள் பால் குடம் ஏந்தி, முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து, கோவிலை அடைந்தனர். பின், அந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் பொங்கலிட்டும், கூழ் ஊற்றியும் வழிபட்டனர். இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் உள்ள வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்கள் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !