திருச்செந்தூரில் வருஷாபிஷேகம்!
ADDED :4495 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், நேற்று, கும்பாபிஷேக தின, வருஷாபிஷேகம், நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையொட்டி, கோயில் நடை, அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்ப கலச, பூஜைக்குப்பின், காலை, 10:30 மணிக்கு, வேதமந்திரங்கள் முழங்க, வருஷாபிஷேகம் நடந்தது. மூலவர் சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானை, விமான கலசங்களுக்கு, போர்த்திகளும், உற்சவர் சண்முகர் விமான கலசத்திற்கு, சிவாச்சாரியார்களும், பெருமாள் விமான கலசத்திற்கு, பட்டாச்சாரியார்களும், புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களின் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோயிலில், தீபாராதனை நடந்தது. இரவில், சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளி அம்பாள், தங்கமயில் வாகனத்தில், வீதியுலா வந்தனர்.