உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகரில் பாலாஜி பெருமாள் கோயில் பிரதிஷ்டை!

விருதுநகரில் பாலாஜி பெருமாள் கோயில் பிரதிஷ்டை!

விருதுநகர்: விருதுநகர் வால சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள பாலாஜி பெருமாள் கோயில் பிரதிஷ்டை, (ஜூன்21) நடக்கிறது.  விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, பாலாஜி பெருமாள் கோயிலில் பாலாஜி பெருமாளுடன், தும்பிக்கையாழ்வார், கருடாழ்வார், துவாரகபாலகர் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பிரதிஷ்டை,நாளை நடப்பதை யொட்டி, நேற்று யாக பூஜைகள் துவங்கியது. இதையொட்டி, திருவிளக்கேற்றுதல், இறை அனுமதி பெறுதல் வாஸ்துசாந்தி, பிரவேசம்ல திவ்யபிரபந்தம் ஆகிய பூஜைகள் நடந்தன. இன்று புனித நீர் எடுத்து வருதல், ரக்ஷாபந்தனம், திருமஞ்சனம்,பூர்ணஹூதி ,சாற்றுமறை பூஜைகள் நடக்க உள்ளன. நாளை காலை,விஸ்வரூபதரிசனம், மஹாபூர்ணாஹூதி,கடங்கள் புறப்பாடு செய்து, சிம்ம லக்கனத்தில் காலை 10.30 மணிக்கு பிரதிஷ்டை நடக்கிறது. இதற்கான பூஜைகளை ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பிரதான அர்ச்சகர்கள் நரசிம்மபட்டர், முரளீதர பட்டர் செய்கின்றனர்.  ஏற்பாடுகளை இந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !