முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4494 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கம் சிவசண்முக நகர் முத்துமாரியம்மன், மதுரை வீரன் கோவில்களின் திருப்பணி முடிந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று 19ம் தேதி காலை யாக சாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு மதுரை வீரன் கோவிலிலும், தொடர்ந்து 9:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மூர்த்தி குருக்கள் தலைமையில் பூஜைகள் நடக்கிறது.