உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தவாடி அகரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவிந்தவாடி அகரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: கோவிந்தவாடி அகரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கிராம மக்களின் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 16ம் தேதி கிராம தேவதைக்கு பொங்கலிட்டு, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 17ம் தேதி மஹாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரகஹோமமும், 18ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அஷ்டபந்தனம் சாற்றுதலும், மாலை மூன்றாம் கால யாக சாலைபூஜையும், பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது. நேற்று, காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும். காலை 9:15 மணிக்கு கலசங்கள் புறப்பாடும் நடந்தது. 9:40 மணிக்கு மேள தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !