கொல்லபள்ளி கிருஷ்ணர் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED :4600 days ago
நகரி: கொல்லபள்ளி கிருஷ்ணர் கோவில் பிரம்மோற்சவம், நேற்று துவங்கியது. சித்தூர் மாவட்டம், புத்தூர் அடுத்துள்ள, கொல்லபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி உடனுறை கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேத்துடன் துவங்கியது. 20ம் தேதி பகல், கல்யாண உற்சவமும், இரவு கருடசேவையும், 21ம் தேதி கலச ஆராதனை, சுதர்சன ஹோமமும், 22ம் தேதி சக்கர ஸ்நான வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.