உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

நகரி: நாகலாபுரம் அருகே, புதியதாக உருவாக்கப்பட்ட பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேம் நாளை (21ம் தேதி) நடைபெறுகிறது. சித்தூர் மாவட்டம், நாகலாபுரம் அடுத்த, கொட்டக்காடு கிராமத்தில், புதியதாக பொன்னியம்மன் கோவில் உருவாக்கப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், ஒன்பது யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து சரஸ்வதி ஹோமம், சக்தி ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை காலை, 8:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை மற்றும் காலை, 9:00 மணிக்கு, மேல் கலசங்கள் ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !