சிவகங்கை கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4492 days ago
சிவகங்கை: சிவகங்கை மஜித் ரோட்டிலுள்ள சனீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூன் 21) நடக்கிறது. நேற்று காலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை,கோபூஜைகள் நடந்தன. மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. கண்ணப்ப சிவாச்சாரியார் தலைமையில் யாக பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், திருப்பணிக்குழு தலைவர் ராமநாதன் செட்டியார், செயலாளர் பாபு, பொருளாளர் ரகுராமன், ஆலய கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், சிவகங்கை நகர் விஸ்வகர்ம சங்க கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இரவு வீரபாண்டி வீரமணி குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, ரத்னசபாபதிதேசிகர் குழுவினரின் தேவார இசை, திண்டுக்கல் ராமன் குழுவினரின் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. நாளை காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது.