திருப்பதியில் சோலார் பவர் பிளான்ட்!
ADDED :4536 days ago
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி வசதியை, தேவஸ்தான செயல் அதிகாரி சப்ரமணியம் துவக்கி வைத்தார். பின் அவர் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த, "ஏயான் ரெனியூயபிள் எனர்ஜி நிறுவனம் மற்றும் "குரூக்ஸ் நிறுவனம், "எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து, 100 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும், "சோலார் பவர் பிளான்ட்டை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தின் மேல் தளத்தில் நிறுவியுள்ளன. மொத்தம், 1.25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த, "பவர் பிளான்ட் மூலம் ஓராண்டிற்கு, 1.5 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதனால், சற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது; திருமலையில் இயற்கை சூழல் நீடிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.