கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4536 days ago
உடுமலை கொங்கல்நகரத்தில், பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 17ம் தேதி துவங்கியது. இரண்டு நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டன. சீனிவாச ராமனுஜ ஆச்சாரியர் ஜீயர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவையொட்டி, சுகிசிவத்தின் ஆன்மிக சொற்பொழிவு உட்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. கொங்கல்நகரம், புதூர், லிங்கமாவூர் உட்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். இந்து அறநிலையத்துறை, விழா குழு மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.