உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரு­தய ஆண்­டவர் தேவா­லயம் திறப்பு

இரு­தய ஆண்­டவர் தேவா­லயம் திறப்பு

சென்னை: எழும்­பூரில், புதிய இரு­தய ஆண்­டவர் தேவா­லயம் திறக்­கப்­பட உள்­ளது. இதில், பல்­வேறு மறை மாவட்ட பேரா­யர்கள் கலந்து கொள்­கின்­றனர். எழும்­பூரில் உள்ள, இரு­தய ஆண்­டவர் தேவா­லயம் பழ­மை­யா­னது. இடப்­பற்­றாக்­கு­றையால், கடந்­தாண்டு இடிக்­கப்­பட்டு, புதிய தேவா­லய கட்­டு­மான பணிகள் நடந்­தன. பணிகள் முடிந்த நிலையில், இன்று மாலை புதிய தேவா­லயம் திறக்­கப்­பட உள்­ளது. திறப்பு விழாவில், சென்னை மயிலை மறை­மா­வட்ட பேராயர், ஜார்ஜ் அந்­தோ­ணி­சாமி, முன்­னாளர் பேராயர் சின்­னப்பா, செங்கை ஆயர் நீதி­நாதன், தரு­ம­புரி மறை­மா­வட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் ஆகியோர் கலந்து கொள்­கின்­றனர். திறப்பு விழாவை முன்­னிட்டு, கூட்டு திருப்­ப­லியும், வழி­பாடும் நடக்­கின்­றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !