உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சிவன் கோவில் மற்றும் நரசிம்மர் கோவிலில் இன்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடக்கிறது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்புற கோவில்களில் சிவன் மற்றும் நரசிம்மருக்கு இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. விஷ்வக்சேனர் ஆராதன நிகழ்ச்சி, வாசுதேவ புண்யாகாஜனம், மகா
சங்கல்பம், கலச ஆவாஹனம், பஞ்சசூக்த பாராயணம், மூல மந்திரங்கள் ஜபம், நடைபெறுகிறது. மாலை 4.00 மணிக்கு தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடக்கவுள்ளது. சிவனுக்கு சிறப்பு ஆடைகளில் அலங்காரங்கள் செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கலாம் என கோவில்களின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !