உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு மருத்துவ சான்று!

பக்தர்களுக்கு மருத்துவ சான்று!

திருப்பூர்:அமர்நாத் யாத் திரை செல்லும் திருப்பூரை சேர்ந்த 30 பக்தர்களுக்கு, திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவ சான்று வழங்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம், அமர்நாத்தில் உள்ள குகைக்கோவிலில், இயற்கையாக உருவான பனிலிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். பனிபடர்ந்த மலைப்பகுதியில் நடைபயணம் சென்று, பனிலிங்கத்தை தரிசிக்கின்றனர்.உடல்நலம் குறித்த மருத்துவ சான்று இருந்தால் மட் டுமே, பக்தர்கள் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 28ம் தேதி முதல், அமர்நாத் குகைக்கோவில்,பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வட மாநிலத் தவர் சிலர், அமர்நாத் யாத்திரை செல்ல உள்ளனர். அவர்களில் 30 பக்தர்கள், அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், இருதயம், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து, மருத்துவ சான்று பெற்றனர். அவர்களுக்கு, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் திருமலைசாமி, சான்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !