வில்லியனூரில் ஜூன், 22ம் தேதி தேரோட்டம்
ADDED :4592 days ago
புதுச்சேரி:வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஜூன், 22 நடக்கிறது.வில்லியனூர் ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதாரஜ பெருமாள் கோவிலில் 10ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன், 22 நடக்கிறது. 60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தேரை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள், வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.ஏற்பாடுகளை தென்கலை வரதராஜபெருமாள் கோவில் சிறப்பு அலுவலர் ஹரிஹரிநமோநாராயணா செய்து வருகிறார்.