உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டைமேடு கோவில்ராஜகோபுர கும்பாபிஷேகம்

கோட்டைமேடு கோவில்ராஜகோபுர கும்பாபிஷேகம்

வில்லியனூர்:வில்லியனூர் கோட்டைமேடு அகோர மாரியம்மன் கோவில், ராஜகோபுர கும்பாபிஷேகம்  ஜூன், 21 நடந்தது.கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.  ஜூன், 21 காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக சாலை பூஜை, 10:05 மணிக்கு ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மூலஸ்தான அகோர மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.விழாவில் முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் தேனீ ஜெயக்குமார், நமச்சிவாயம், சேர்மன் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், காங்., பிரமுகர்கள் கண்ணபிரான், ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அகோர மாரியம்மன் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் நகரவாசிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !