உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை

புதுச்சேரி:முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பவித்ர உற்சவ நிறைவு விழாவையொட்டி, கருட சேவை நடந்தது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கடந்த 16ம் தேதி பவித்ர உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 20ம் தேதி வரை 90 திருவாதாரனம் நடந்தது.பவித்ர உற்சவத்தின் நிறைவு நாளான  ஜூன், 21 காலை 9:00 மணிக்கு விஷேச திருமஞ்சனம் நடந்தது. லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதி வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முத்தியால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி சீனிவாச ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !