உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் கோவில் தேரோட்டம்

மூலநாதர் கோவில் தேரோட்டம்

பாகூர்:பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டம் ஜூன், 21 நடந்தது.பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி, தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. ஜூன், 21தேரோட்டம் நடந்தது. காலை 8:45 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தியாகராஜன், ராஜவேலு, ஏ.எப்.டி. மில் சேர்மன் பாலன் ஆகியோர் வடம் பிடித்துதேரோட்டத்தை துவக்கி வைத்தனர். விழாவில், தொழிலதிபர் சேதுராமன், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராமு உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜூன், 22 (22ம்தேதி) இரவு, முருகன், வள்ளி தெய்வானை தெப்ப உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளைகோவில் தனி அதிகாரி பிரபாகரன், நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !