சாயிபாபா கோவிலில் கும்பாபிஷேக விழா
புதுச்சேரி:பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபாகோவிலில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக தினவிழா நடந்தது.பிள்ளைச்சாவடியில் அமைந்துள்ள, சீரடி சாயிபாபா கோவில் பிரார்த்தனை மண்டப 11ம் ஆண்டு கும்பிஷேக தின விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இரண் டாம் நாளான ஜூன், 21 காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 108 கலச சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, கடலூர் நந்தகுமார் சீரடி சாயி பஜன்ஸ் நிகழ்ச்சி, சாயி பாபா பல்லக்கு உற்சவம், ஆரத்தி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாயிபாபா அருள்பாலித்தார். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாயிபாபா பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், சீரடி சாயிபாபா டிரஸ்ட்டீ ரமணி, மக்கள் தொடர்பு அலுவலர் சாய்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீரடி சாயிபாபா சேவா சேரிடபிள் டிரஸ்ட், மற்றும் சீரடி சாயிபாபா சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.