திரவுபதியம்மன் கோவிலில் வரும் 26ல் கும்பாபிஷேகம்!
மதுராந்தகம்: ஜமின் புதூர் திரவுபதி அம்மன் கோவிலில், வரும், 26ம் தேதி, மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மதுராந்தகம் அடுத்துள்ள ஜமின் புதூர் கிராமத்தில், கண்ணபிரான் தர்ம புத்ர பீம அர்ஜுன நகுல சகாதேவ, திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிஷே விழா வரும், 26ம் தேதி, நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை, வாஸ்து சாந்தி, யாகசாலா நிர்மானம், ம்ருதயங் கிரஹணம், அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, கலாகர்ஷணம், மஹா சாந்தி யாகம், பூர்ணாஹீதி, சாற்றுமுறை உள்ளிவைகள் நடைபெறுகின்றன. வரும், 25ம் தேதி காலை, 8:00 மணிக்கு, புண்யாஹ வாசனம், கும்பாராதனம், ததுக்த ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாஹீதி சாற்றுமுறை, மாலை, 4:00 மணிக்கு, மஹா சாந்தி திருமஞ்சனம், மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது. 26ம் தேதி காலை, 9:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு, திருவிதி உற்சவமும் நடைபெற உள்ளன.