உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி நூதன வழிபாடு பல கிராமம் மாறும் கொடும்பாவி!

மழை வேண்டி நூதன வழிபாடு பல கிராமம் மாறும் கொடும்பாவி!

நங்கவள்ளி: ஜலகண்டாபுரம் அருகே மழை வேண்டி, பொதுமக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. ஜலகண்டாபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், விவசாயிகள், உழவு செய்யும் அளவுக்கு, இதுவரை மழை பெய்யவில்லை. அதனால், மழை வேண்டி, பொதுமக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மழை பொழியாத கிராமத்தில், பொதுமக்கள் ஒன்று கூடி, கோரமாக காட்சியளிக்கும் கொடும்பாவி ஒன்றை தாயார் செய்கின்றனர். அதை, செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து, கிராம எல்லையை விட்டு, வேறு கிராம எல்லைக்குள் நள்ளிரவு நேரத்தில் போட்டு விடுகின்றனர். அக்கிராம மக்கள், கொடும்பாவியை பார்த்ததும், அவர்களும், அந்த கொடும்பாவியை, வேரொரு கிராமத்துக்குள் கொண்டு சென்று போட்டுவிட்டு வந்து விடுவர். அப்படியே, ஊர் ஊராக கொடும்பாவி இடம்மாறிக் கொண்டே இருக்கும். எந்த ஊரில் கொடும்பாவி கிடக்கிறதோ, அங்கு மழை பொழியாது என்பது ஐதீகம். மழை வேண்டி, கொடும்பாவி இடமாற்றப்படும் சம்பவம், பல இடங்களில் நடப்பதால், ஜலகண்டாபுரம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !